சென்னை, செப்.10: இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக இன்று அதிகாலை தமிழகம் திரும்பினார். முதல்வரை வரவேற்க நேற்று நள்ளிரவு முதலே சென்னை விமான நிலையத்தில் அதிமுகவினர் குவியத் தொடங்கினர்.

தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்தி.நகர் பி.சத்யா எம்எல்ஏ, தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவ¤ எம்எல்ஏ மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திநகர் பகுதி செயலாளர் உதயா, ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் நுங்கை செல்வகுமார் மற்றும் கேபிள் டிவி மாரி உள்ளிட்ட வட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.