விழுப்புரம், செப்.10: விழுப்புரம் மாவட்ட அளவிலான பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தின்போது கலெக்டரிடம் 657 கோரிக்கை மனுக்கள் குவிந்தன. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமைவகித்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத்தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியன கோரி 657 மனுக்கள் வரப்பெற்றன.

அவற்றை கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கு வழங்கினார். மாற்று தினாளிகள் உட்கார்ர் திருந்த இடத்திற்கே கலெக்டர் சென்று ஒவ்வொருவரிடமும் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் முதல மைச்சரின் தனிப்பிரிவு அலு வலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.