கொழும்பு, செப்.10:  பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட மலிங்கா, மேத்யூஸ் உட்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. அப்போது, இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து, பாதுகாப்புக் கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் 27-ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை ஒருநாள், மூன்று டி20 போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்க விரும்பவில்லை என்று இலங்கை டி20 அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா, தனஞ்செய டிசில்வா, அகிலா தனஞ்செயா, லக்மல், சண்டிமல், டிக்வெல்லா, குசால் பெரேரா, கருணாரத்னே ஆகிய 10 வீரர்கள், இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணியின் முக்கிய மற்றும் முன்னணி வீரர்கள் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதால், இந்த தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் நிலவிவருகிறது. அதேசமயம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடர் நடக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.