சென்னை, செப்.10: கேரள மக்களின் அறுவடைத் திருநாளான திருவோணம் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைவர்களின் அறிக்கை வருமாறு:-

அன்புமணி ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது: ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாளும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று கூறி ஓணம் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேஎஸ் அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் எவ்வித பேதமின்றி மலையாள மொழி பேசுகிற கேரள மாநில மக்கள் தமிழக மக்களோடு சகோதர உணர்வுடன் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்தும், தொழில் புரிந்து வருவதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். தமிழகத்தில் வாழ்கிற கேரள மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே. வாசன்
தமாகா தலைவர் ஜிகே. வாசன் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், கேரள மக்கள் சாதி, மத, பேதம் கடந்து பசுமையும், ஈரமும் நிறைந்திருக்கும் மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழாவான ஓணம் பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. மகாபலி மன்னரைப் போல நல்ல எண்ணங்களுடன், தொண்டுள்ளத்துடன், அன்புடன், அரவணைத்து, உதவிகள் செய்து, உபசரித்து வாழும் மலையாள மக்களுக்கு த.மா.கா சார்பில் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறேன்.

ஆர். சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ஆர் சரத்குமார் தனது வாழ்த்து செய்தியில்,சிறப்புமிக்க ஓணம் திருநாளில், கேரள மக்கள் மற்றும்  உலகெங்கும் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் அன்பும், மகிழ்ச்சியும் கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபேன்று எல்ஜேகே நிறுவனத்தலைவர் நெல்லை ஜீவா உட்பட பல்வேறு தலைவர்கள் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்னர்.