மும்பை, செப்.10:  டெஸ்ட் தொடரில் ரோஹித்தை தொடக்க வீரராக சேர்ப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் தொடக்க ஆட்டக்காரராக செயல்பட்டுவருபவர் ரோஹித் ஷர்மா. ஆனால், டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இவருக்கான நிரந்தர அங்கீகாரம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்பினை இவர் சரியாக பயன்படுத்த தவறியதே இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டாலும், தற்போது முடிந்த வெ.இண்டீஸ் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சொதப்பிவரும் ராகுலுக்கு, தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவது ஏன்? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

இந்த நிலையில், இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறுகையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப்பின்னர் தேர்வுக்குழு இன்னும் சந்திக்கவில்லை. ரோஹித்தை தொடக்க வீரராக களமிறக்குவது குறித்து அடுத்த கூட்டத்தில் கண்டிப்பாக விவாதிப்போம், என்றார்.