சென்னை, செப்.10: நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 37). இவரது மனைவி சண்முக பிரியா (வயது 32). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், பூந்தமல்லி அடுத்த செந்நீர்குப்பத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு குடும்பத்துடன் பைக்கில் சென்றுவிட்டு நேற்றிரவு வீடு திரும்பியுள்ளனர்.

பூந்தமல்லி பஸ் டிப்போ அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, பின்னால் பைக்கில் வந்த மர்மநபர்கள் சண்முகபிரியா அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சண்முகபிரியாவுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் மர்மநபர்களை தேடிவருகின்றனர்.