சென்னை, செப்.10: போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்தவரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். கிண்டியில் உள்ள விடுதிகளில், கிண்டி சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்றிரவு சோதனையிட்டனர். அப்போது, அங்கு தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த ஒருவரிடம் இலங்கை மற்றும் இந்திய பாஸ்போர்ட்கள் இருந்தது, கண்டறியப்பட்டது. அவரிடம் போலீசார் நடத்தி விசாரணையில், கொழும்புவை சேர்ந்த ரானேஷ் குமார் (வயது 44) என்பது தெரியவந்தது.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை வந்துள்ள இவர், இங்கிருந்து வெளிநாடு செல்வதற்காக மும்பையில் உள்ள ஒரு ஏஜென்ட் மூலமாக இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார்.
விசா பெற வேண்டி கிண்டியில் உள்ள விடுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அப்போதுதான், போலீசாரின் சோதனையில் இவர் சிக்கியுள்ளார் என தெரியவந்தது. இதனையடுத்து, ரானேஷ்குமாரை கைது செய்த போலீசார், மத்திய குற்றப்பிரிவு போலீசில் அவரை ஒப்படைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.