புதுடெல்லி, செப்.11: தமிழக பிஜேபி தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக பதவி ஏற்றுக்கொண்டார். நாட்டின் தற்போதைய கவர்னர்களில் தமிழிசை தான் இளம்வயது கவர்னர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கவர்னர்களின் சராசரி வயது 73 ஆக தற்போது உள்ளது. பெரும்பாலும் 70 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களே கவர்னர்களாக உள்ளனர். மொத்தம் உள்ள 28 பேரில் ஏழு பேர் 60 வயதுகளிலும், 14 பேர் 70 வயதுகளிலும், 6 பேர் 80 வயதுகளிலும் உள்ளனர். 60 வயதுக்கு கீழே உள்ள ஒரே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் (58 வயது) தான். 85 வயதான ஆந்திர மாநில கவர்னர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் தான் அதிக வயதானவர்.