டோக்கியோ, செப்.11: அணு உலை வெடிப்பின் போது கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நீரை பசிபிக் கடலில் கொட்ட ஜப்பான் சுற்றுச் சூழல்துறை பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2011-ல் பயங்கர நிலநடுக்கத்தால் 15 மீட்டர் உயரம் கொண்ட ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியன.

இதனால் அங்குள்ள புகுஷிமா அணு உலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 3 உலைகளின் குளிரூட்டும் அமைப்பு சேதமானது. இதனால் கதிரியக்கம் வெளியாகி அணு உலையை குளிரூட்ட பயன்படும் தண்ணீரில் கதிரியியக்கம் கலந்தது.

கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நீரை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக ஜப்பான் அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சர் யோஷியாகி ஹராடா, ‘கதிரியக்க நீரை பசிபிக் கடலில் கலந்து நீர்த்து போகச் செய்வதே நமக்கு இருக்கும் ஒரே வழி, எனினும் இது குறித்து அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கும்’ என்றார்.

ஜப்பான் மந்திரியின் இந்த கருத்தை அந்நாட்டு மீனவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.