காபூல் அமெரிக்க தூதரகத்தில் ராக்கெட் தாக்கு

TOP-6 உலகம்

காபூல், செப்.11:  ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றிருப்பதால் பதற்றம் நிலவுகிறது.

மூன்றாயிரம் பேருக்கு மேல் உயிரிழப்புக்கு காரணமான செப்டம்பர் 11 தாக்குதலின் 18-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து எச்சரிக்கை ஒலி ஒலித்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று நேட்டோ கூட்டுப் படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலிபான்களுடனான பேச்சு வார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்ததை அடுத்து நடந்த முதல் பெரிய தாக்குதலாக இது கூறப்படுகிறது.