விருதுநகர், செப்.11: விரைவில் தினகரனும் திமுகவில் சேருவார் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் இன்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவில் பால் உற்பத்தி செய்வது போல் நவீன முறையில் சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான பால் பண்ணை விரைவில் அமைக்கப்படும்.

கால்நடை ஆராய்ச்சிநிலையமும் சேலத்தில் விரைவில் தொடங்கப்படும். இபிஎஸ், ஒ.பி.எஸ் இருவரும் சிறந்த முறையில் ஆட்சியை கொண்டு செல்கின்றனர்
இந்தியாவின் முதன் மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றுவதற்க்கன நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.

ஸ்டாலினை தவிர ஒட்டு மொத்த தமிழகமும் முதல்வரை பாராட்டுகிறார்கள். திமுக உடன் மறைமுகமாக கூட்டணி வைத்து ஒவ்வொருவராக இறுதியில் தினகரன் அமமுகவிட்டு விலகி விரைவில் திமுகவில் சேர்ந்து விடுவார் என்றார்.