சென்னை, செப். 11: வரும் 15ம்தேதி பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாளை யொட்டி அன்று காலை இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் கட்சி நிர்வவிகள் உட்பட அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்ய உள்ளனர் என்று தலைமைக்கழகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாtவின் 111-ஆவது பிறந்த நாளான 15.9.2019 – ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகஇணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்ருமான . எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் அதிமுக செயலாளர்களும், எம்பிக்கள் , எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்களும்; அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த நிர்வாகி களும்,கட்சி தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது