அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி: நாராயணசாமி துவக்கினார்

தமிழ்நாடு

புதுவை, செப்.11: மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கான ஒருநாள் பயிற்சி புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி அரசின் நகர குடும்பம் புதுச்சேரி திட்ட அமைப்பின் சார்பில் மத்திய வீட்டுவசதி துறை இணைந்து, அரசு அதிகாரிகளுக்கான ஒருநாள் பயிற்சி முகாமை நடத்தின.

இதில், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், மத்திய அரசு செயலாளர் துர்கா சங்கர், எம்.எல்.ஏக்.கள் ஜெயமூர்த்தி, வெங்கடேசன், புதுச்சேரி அரசின் தலைமை செயலாளர் அஸ்வின் குமார், அரசு செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.