சென்னை, செப்.11: திருவொற்றியூர் மேற்கு மாடவீதி அருகே கத்திகளுடன் சுற்றிதிரிந்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருவொற்றியூர் மேற்கு மாடவீதியில் போலீசார் நேற்றிரவு ரோந்து பணி மேற்கொண்டபோது, அங்கே சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்டபோது, அவர்களிடம் 2 கத்திகள் இருந்து தெரியவந்ததையடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை 5 பேரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த சுதாகர் (வயது 23), தனசேகர் (வயது 22), ராமச்சந்திரன் (வயது 34), முருகன் (வயது 22), சரவணன் (வயது 34) என தெரியவந்தது.