கூவம் ஆற்றில் கிடந்த இளம்பெண் உடல் மீட்பு

சென்னை

சென்னை, செப்.11:எழும்பூர் எல்ஜி ரவுண்டானா அருகே கூவம் ஆற்றில் இன்று காலை 9மணியளவில் இளம்பெண் சடலம் மிதப்பதாக எழும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி போலீசார் மற்றும் தீ அணைப்பு போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கூவத்தில் மிதந்த உடலை மீட்டு பார்த்தனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் என்றும் அவர் நைட்டி மட்டும் அ ணிந்திருந்தார் என்றும் சிகப்பு நிறமாக இருந்தார்.

பெண்ணின் உடலை மீட்டு போலீவசர் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும்அந்த பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரை யாராவது கொலை செய்து கூவத்தில் போட்டனரா அல்லது கூவத்தில் யாராவது தள்ளி விட்டனரா அல்லது இளம்பெண் கொன்று கூவத்தில் வீசினாராகள் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்இளம்பெண் குறித்து அந்த அனைத்து காவல் நிலையங்களுக்கு யாராவது காணாமல் போனார்களா என்ற விவரத்தை சேகரிக்குமாறு கூறியுள்ளனர். இன்றுகாலை இளம்பெண் பிணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் எழும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.