சென்னை, செப்.11: ராமாபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.  ராமாபுரம் கிரி நகர் மாநகராட்சி பூங்கா அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை கைப்பற்றிய போலீசார், அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் ராமாபுரம் நடேசன் நகரைச் சேர்ந்த சந்துரு (வயது 20) என்பதும், தனியார் கல்லூரியில் படித்து வரும் சந்துரு, தன்னுடன் படித்து வரும் நண்பர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. சந்துருவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் எடையுடைய கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.