சென்னை, செப்.11:தங்கம் விலையை கட்டுப்படுத்துவது எளிது அல்ல: மோட்டார் வாகன துறையில் தேக்க நிலையை சரி செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் முயற்சிகள் மற்றும் உறுதியான செயல்பாடுகள் குறித்து சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு இருக்கிறது. அரசியல் சட்டப்படி, 370-ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், அரசியல் சட்டப்பிரிவு 35(ஏ)-யை யும் ரத்து செய்தது.

மோட்டார் வாகன உற்பத்தி துறை சார்ந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கருத்துகளை கேட்டபின்னர், சில அறிவிப்புகள் வெளியிடப்படும். தேக்க நிலையை சரி செய்ய தீவிர நடவடிக்ற கயும் மேற்கொள்ளப்படும். ஜி.எஸ்.டி. கூட்டம் வருகிற 20-ந் தேதி கூடுகிறது. அதில் என்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. வாகன உற்பத்தி துறை சார்ந்தவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு எடுக்கும்.

தங்கத்துக்கான மூலப்பொருள் இந்தியாவில் இல்லை. இறக்குமதியை நம்பித்தான் சார்ந்து இருக்கிறோம். இறக்குமதி, டாலர் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் அடிப்படையில் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயம் செய்யப்படும் தங்கம் விலையை, மத்திய அரசு கட்டுப்படுத்துவது எளிது அல்ல. ஆபரணத்துக்காக மட்டும் தங்கம் பயன்படுத்துவது இல்லை. மு இந்த போக்குவரத்தினால் சென்னை துறைமுகத்தில் இறக்குமதி அதிகரிக்கும். இதனால் இங்குள்ள பொருளாதாரம் பன்மடங்கு உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

பிஜேபி அறிவித்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு தான் இருக்கின்றன. உருவாக்கவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முத்ரா கடன் உதவி திட்டம் மூலம் பலர் பயனடைந்த போதிலும், முறைசாரா அமைப்புகளில் வேலை வாய்ப்புகள் பெற்றவர்களின் புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. முறைசார்ந்த அமைப்புகளில் வேலைவாய்ப்புகள் பெற்றவர்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமே இருக்கின்றன. இவ்வாறு அவர் பதிலளித்தார்.