குட்டப்பட்டி நாராயணன் மறைவு: கே.எஸ்அழகிரி இரங்கல்

சென்னை

சென்னை, செப். 11: காங்கிரசின் மூத்த நிர்வாகி குட்டப்பட்டி நாராயணன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒன்றுபட்ட சேலம் மாவட்ட காங்கிரசின் மூத்த அடையாளமாகத் திகழ்ந்த குட்டப்பட்டி ஆர்.நாராயணன் மறைவு செய்தி அறிந்து மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன் பெருந்தலைவரின் எளிய தொண்டராய் பொதுவாழ்வைத் துவக்கி, படிப்படியாய் உயர்ந்து மாவட்ட காங்கிரஸ் தலைவராகி, சட்டமன்ற உறுப்பினராகி காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வலிமையை கூட்டியவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமது முதிய வயதிலும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை அனைத்து தலைவர்களையும் அழைத்து மிகச் சிறப்பாக கொண்டாடியவர், மிகச் சிறந்த காந்திய வாதியான குட்டப்பட்டி ஆர்.நாராயணன் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றார்.