சிதம்பரம், செப்.11: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இயற்பியல் துறையில் சென்னை ஓஎன்ஜிசி நிதி உதவியுடன் ரூ.9 லட்சம் லட்சம் செலவில் ஏழு வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸ் அறைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ப்ரொஜெக்டர் ஸ்மார்ட் கோபிகள் சீலிங் மவுண்ட் கிட்டுகள் கேபிள்கள் லேப்டாப்புகள் ஒலி பெருக்கி கருவிகள் மின் உபகரணங்கள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் முருகேசன் கலந்து கொண்டு ஸ்மார்ட் கிளாஸ் அறைகளை துவக்கி வைத்தார். இதில் சென்னை ஓஎன்ஜிசி குழும பொது மேலாளர் மணி, செயல் இயக்குனர் ஷ்யாம் மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.