ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சின் புதிய வகை உணவுகள்

சென்னை

சென்னை, செப்.11: ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் சிறப்பு இனிப்பு, கார வகைகளை அறிமுகப்படுத்துகிறது. தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு தி.நகரில் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தனது கிளையில் வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் தங்களது குடும்பத்தின ருடன் கலந்துகொள்ள தனி சிறப்பு விருந்தை செப். 11 மற்றும் 12 தேதிகளில் நடத்துகிறது.

பழங்காலத்தில் கேரளாவின் தலைசிறந்த மன்னர்களில் ஒருவரான மகாபலியை நினைவில் கொள்ளும் விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி 20 வகை உணவு வகைகளை அறிமுகப்படுத்துகிறது. கேரள உணவு வகை பாணியில் பழங்கள் மற்றும் தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்படும். குறிப்பாக இஞ்சிப்புளி என்ற உணவு பிரபலமானதாகும். நெய் பலகாரங்கள், பரிமாறப்படும். வாழை இலையில் ஓணம் சிறப்பு சைவ உணவுகள் விநியோகிக்கப்படும்.

ஆர்டரின் பேரில் வாழை இலையில் குறிப்பிட்ட இடங்களில் பரிமாறப்படும். காளான், அவியல், தோரன், தீயல், சம்பாரம், அடைபாயாசம், பலாப்பழ பாயாசம், பச்சடி, பப்படம், வாழைப்பழம் மற்றும் வாழை சிப்ஸ் போன்றவை செப்.1 1 மற்றும் 12-ந் தேதிகளில் காலை 11.30 மணி முதல், பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும் சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் பரிமாறப்படும்,