திருத்தணி செப்.11: திருத்தணி அருகே 3 குளங்களை தூர்வாரும் பணியை நோபல் பவுண்டேஷன்ல் நிறுவனத்தலைவர் டாக்டர் கலைமணி துவக்கிவைத்தார். திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் ஊராட்சியில் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் இங்குள்ள 3 குளங்களை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தி தண்ணீர் சேமிக்க தூர் வாரும் பணி தொடங்கியது. நோபல் பவுண்டேஷன் எனும் நிறுவனம் நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஏரி, குளங்களை தூர்வாரவும் முன் வந்து இந்த பணியை கடந்த மாதம் திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தொடக்கி வைத்தா. தொடர்ந்து திருத்தணி நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் இந்த தூர்வாரும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது.

இந்நிலையில் திருத்தணி ஒன்றியத்தில் அடங்கிய தரணிவராகபுரம் ஊராட்சியில் ராகவேந்திரா நகர் தாங்கல் குளம், ராகவ ரெட்டி குளம், ரெட்டி பாறைகுளம் ஆகிய 3 குளங்கள் ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தி இந்த பகுதி மக்களுக்கு நிரந்தரமான நீர் ஆதாரம் சேமிக்கும் வகையில் தூர் வாரும் பணியை நோபல் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் கலைமாமணி தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, முன்னாள் நகராட்சி தலைவர் டி.சௌந்தர்ராஜன், தரணிவராகபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கள் என்.ஏ.குப்பன், எம்.சந்திரன், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.