புதுடெல்லி, செப்.11: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். மதிமுக சார்பில் நடைபெற இருக்கும் மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள ஒப்புக்கொண்டிருந்தார். காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை.

எனவே, உச்சநீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்காக ஆட்கொணர்வு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தாக்கல் செய்தார். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.