டிமாண்டிகாலனி, இமைக்கா நொடிகள் பட புகழ் அஜய் ஞானமுத்து நடிகர் விக்ரமை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். தற்போதைக்கு விக்ரம் 58 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் படத்திற்கு வசனம் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 21-ம் தேதி துவங்க உள்ளது. ஐரோப்பா மற்றும் கானாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.