சென்னை, செப்.12: திருவள்ளூவர் மாவட்டம் கடம்பத்தூரை சேர்ந்தவர் அருள் (வயது 55). இவர், அண்ணாநகர் 12-வது மெயின் ரோட்டில் ஒரு வீட்டிமுன் டெய்லர் கடை நடத்திவருகிறார். இவரது கடையின் பின்புறம் உள்ள கழிவறையை பயன்படுத்திவருவது வழக்கம்.

இந்த நிலையில், கழிவறையில் உள்ள ப்ளகில், தையல் மெஷினில் உள்ள பவர்சார்ஜருக்கு சார்ஜ் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, உடலில் மின்சாரம் பாய்ந்து அங்கேயே விழுந்துள்ளார். துர்நாற்றம் வீசுவதால் சந்தேகடைந்து அங்கு சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர், அருள் உயிரிழந்து கிடப்பதை கண்டு, போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.