ராஞ்சி, செப்.12: நாடு முழுவதும் 60 வயது நிரம்பிய சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 38 ஆயிரம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தொடக்க விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி உட்பட நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த விவசாயிகள் வந்திருந்தனர்.

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் 18 முதல் 40 வயதுக்கு இடையே குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால், 60 வயதானதும் அவர்களுக் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.

மக்களவைத் தேர்தலின் போது பிஜேபி அளித்த வாக்குறுதி படி இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ஜார்க்கண்ட் மாநில அரசின் புதிய சட்டமன்ற கட்டிடத்தையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.