சென்னை, செப்.12: சுஜன் (வயது 31) என்பவர் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவர், நேற்றிரவு சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர். சுஜனையே உற்று பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென அந்த நபர், அருகில் கிடந்த பாட்டில் துண்டை எடுத்து, சுஜனின் கழுத்தில் கீறியுள்ளார். தகவலறிந்து வந்த பெரியமேடு போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்ததில், பல்லவன் சாலையை சேர்ந்த காஞ்சி (வயது 19) என்பதும், குடிபோதையில் இவ்வாறு நடந்துக்கொண்டதாகவும் தெரியவந்தது.