விழுப்புரம், செப்.12: விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியில் சர்வதேச அளவில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளதை அரசு தலைமை செயலாளர் கே.சண்முகம், நிதித்துறை அரசு முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.கே. கோபால்ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியதாவது:- மூன்றாவது கட்டமாக கால்நடை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞான ரீதியாக உலக அளவில் பால் பதப்படுத்தும் மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். உணவு பொருள் தயாரிப்பதற்கான தரக் கட்டுப்பாடு மையம் கட்டமைக்கப் படவுள்ளது. இந்த உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இதுபோன்ற தரக்கட்டுப்பாட்டு மைய அடிப்படை வசதிகள் இருந்தால்தான் பயனள்ளதாக இருக்கு என்றார்.