தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த டாப்ஸி பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். பாலிவுட்டில் தனக்கென்று ஒரு பெயர் எடுத்துவிட்டார். இந்நிலையில் அவர் தனது காதல் வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே சமயம் நான் சிங்கிள் இல்லை. என் வாழ்வில் இருக்கும் நபர் நடிகரோ, கிரிக்கெட் வீரரோ இல்லை. சொல்லப் போனால் அவர் இப்பகுதியை சேர்ந்தவர் இல்லை.

நான் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் போது தான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு ஆடம்பரமான திருமணம் தேவையில்லை. ஒரு நாள் நண்பர்கள், குடும்பத்தாருடன் நடக்கும் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். பல நாட்கள் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவது எனக்கு பிடிக்கவில்லை. என் திருமணம் ஒரு நாள் நிகழ்வாகத் தான் இருக்கும் என்றார். டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மேதியஸ் போ என்பவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் பேட்டியில் தெரிவித்துள்ள விபரங்களை பார்த்தால் அவர் மேதியஸை தான் காதலிக்கிறார் என தெரிகிறது.