புதுடெல்லி, செப்.13: பிரதமர் மோடி வருகிற 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மோடி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஐ.நா. பொதுச்சபையில் முதல் முறையாக உரையாற்ற உள்ளார்.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், பிரதமர் மோடி 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மோடி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஐ.நா. பொதுச்சபையில் முதல் முறையாக உரையாற்ற உள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஐ.நா. தலைமையகத்தில் உள்ள பொருளாதார, சமூக கவுன்சில் அரங்கில் ‘தலைமை பண்பு விவகாரங்கள், சமகால உலகுக்கும் தேவையானவர் காந்தி’ என்ற தலைப்பில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று தெரிவித்தார்.