ஆல் தி சில்ரன் சார்பில் நடந்த விழிப்புணர்வு

சென்னை

சென்னை, செப்.13: சாலை விதிகளை பின்பற்றுதல் மற்றும் அபராதங்களை செலுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை வியாசர்பாடியில் செயல்பட்டு வரும் ஆல் தி சில்ரன் அமைப்பு சார்பில் ஆவடி காமராஜர் ரோடு சிக்னல் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் எடிசன் தலைமை தாங்கினார். துணை ஆய்வாளர் அமல்ராஜ் போக்குவரத்து விதி முறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். தலைமை காவலர் முரளி கிருஷ்ணன் நன்றி கூறினார்.

முன்னதாக ஆல் தி சில்ரன் சார்பாக வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆல் தி சில்ரன் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருதனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.