சென்னை, செப்.13: வாக்கிங் சென்ற பெண்ணிடம் இருந்து மூன்றரை சவரன் நகையை பறித்துச்சென்ற ஹெல்மெட் ஆசாமியை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். சூளைமேடு சௌராஷ்டிரா நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 64). இவர். அண்ணாநகர் டவர் பூங்கா அருகே நாள்தோறும் காலை வாக்கிங் சென்றுவருவது வழக்கம். இதேபோல், கடந்த 10-ம் தேதி காலையும் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, பைக்கில் வந்த ஹெல்மெட் ஆசாமி, பச்சையம்மாள் அணிந்திருந்த மூன்றரை சவரன் நகையை பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி, அண்ணாநகரை சேர்ந்த கலாநிதி என்கிற வசந்த் (வயது 37) என்பவரை கைது செய்து, நகையை மீட்டனர்.