பிரச்சனை தீர்ந்தது 20-ல் காப்பான்: கேவி ஆனந்த்

சினிமா

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மற்றும் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள காப்பன் திரைப்படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் இப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதில், 2016-ம் ஆண்டு ‘சரவெடி’என்ற தலைப்பில் கதை எழுதி கே.வி.ஆனந்த்திடம் அளித்தாகவும் தனது அனுமதியின்றி காப்பான் என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டதாகவும் ஜான் சார்லஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சரவெடி படத்தின் கதை வேறு, காப்பான் கதை வேறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அடையாளம் தெரியாதவர்களிடம் தன் எப்போதும் கதை கேட்பதில்லை எனவும், சரவெடி கதையும் காப்பன் கதையும் வெவ்வெறானது எனவும் கூறப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி சதீத் குமார் மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இது குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே வி ஆனந்த், இந்த தீர்ப்பு தமக்கு மட்டுமல்ல இது போல் கதை திருட்டு குற்றம் சாற்றப்படும் அனைத்து இயக்குனருக்கும் கிடைத்த வெற்றி யாக கருது கிறேன். திட்டமிட்டப்படி வரும் 20-ம் தேதி படம் வெளியாகும் என்றார்.