மேல்மருவத்தூர், செப். 14: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த தியான மண்ட பத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்து அருள்திரு பங்காரு அடிகளாரின் முன்னிலையில் திறந்து வைத்தார். புதிய தியானம் மண்டபம் திறப்பு விழாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலை 11.30 மணிக்கு சித்தர் பீடம் வந்தடைந்தார். அவருக்கு சித்தர் பீடத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் கருவறைக்கு சென்று ஆதிபராசக்தி அம்மனை ஆராதனை செய்து வழிபட்டார்.

பின்னர் 11.45 மணியளவில் தியான மண்டபம் வந்தடைந்த கவர்னர் தியான மண்டபத்தின் தரைத்தளத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்;. தரைத்தளத்தை பார்வையிட்டு குத்துவிளக் கேற்றிய பின்னர் தியான மண்டபத்தின் முதல் தளத்திற்கு சென்று முதல் தள அமைப்பைப் பார்வையிட்டார். முதல் தளத்தின் மேற்கூரையில் 9 நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகள் 3 சக்கரங் களுக்குள் வடிவமைக்கப் பட்டிருந்தது. தியான மண்டப சுவற்றில் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளாரின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப் பட்டிருந்தது.

பக்கவாட்டு சுவர்களில் 18 சித்தர்களின் உருவச்சிலைகளும் அமைக்கப் பட்டு, நவகிரகங்களின் உருவங்களும், சப்த கன்னியர் உருவங்களும் சித்தரிக்கப் பட்டுள்ளன. மையத்தில் பீடமும் அதன் மேல் விளக்கும் நிறுவப் பட்டிருந்தது.
பின்னர் கவனர் தியான மண்டபத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். அப்போது . கவர்னருக்கு ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் நினைவு பரிசை வழங்கினார். தொடர்ந்து ஆன்மிககுரு அருள்திரு அடிகளாருக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அறங்காவலர்கள் அன்பழகன் மற்றும்செந்தில்குமார் நினைவு பரிசினை வழங்கினார்

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினார்கள். பகல் 12 மணிக்கு  இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் இணைச்செயலாளர் சுரேந்திரநாத் நன்றியுரையும், மாலை 6 மணிக்கு ஒலி ஒளி மற்றும் இசை நடன நீர் ஊற்றுக் காட்சி சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.