புதுச்சேரி, செப்.14: புதுச்சேரி அருகே உள்ள லட்சுமி நாராயண மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் காக்கும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சை சேவைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். அதிநவீன சிகிச்சை பிரிவு நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜா அமர்நாத் முன்னிலை வகித்தார். அவசர சிகிச்சைப்பிரிவில் சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் ராமன் துவக்கி வைத்தார்.