இஸ்லாமாபாத், செப்.14: முசாபராபாத்தில் காஷ்மீர் பிரச்சனைக்காக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நடத்திய பேரணியை ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் புறக்கணித்தனர். இதனால் பேரணி தோல்வியில் முடிந்தது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டபிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து பாகிஸ்தானும் அதன் பிரதமரும் இந்தியாவுக்கு எதிராக பேசிவருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் யாரும் ஆதரிக்கவில்லை. சமீபத்தில், பாகிஸ்தானால் நடத்தப்பட ‘காஷ்மீர் ஒற்றுமையின் நேரம் ‘ பாகிஸ்தானியர்களிடையே செலவாக்கில்லாமல் போய் விட்டது.

ஆகஸ்ட் 30 அன்று, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் சேர பள்ளி குழந்தைகளை வழிநடத்த பாகிஸ்தான் அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் அது முடியவில்லை. ஆர்ப்பாட்டங்களைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் போக்குவரத்தை தடைசெய்தனர் மற்றும் சாலைகளைத் தடுத்தனர். காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இம்ரான் கான் புதன்கிழமை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் ஒரு பேரணி நடத்தினார். இந்த பேரணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியும் கலந்து கொண்டார். ஆனால் உள்ளுர்வாசிகளான ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்த பேரணியை முற்றிலும் புறக்கணித்தனர்.

“பிக் ஜல்சா” என்கிற ஒரு மிகப்பெரிய பேரணி வெற்றி பெறவில்லை என பாகிஸ்தான் சமூக ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா கூறி உள்ளார். அவர் கூறியதாவது:- “முசாபராபாத்தில் இம்ரான் கானின் பேரணி ஒரு தோல்வியாக முடிந்தது. மக்கள் பேரணிக்காக அபோதாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து லாரிகளில் ஏற்றி அழைத்து வரப்பட்டனர். மக்கள் பேரணியை முற்றிலுமாக புறக்கணித்தனர். இது குறித்து உலக மக்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தான் அதிகாரிகளால் கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பலூசிஸ்தான் மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடைபெற்று வரும்போது காஷ்மீர் குறித்த தனது புனையப்பட்ட கதையை இம்ரான் கான் முன்வைப்பது முரணானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.