ரியாத், செப்.16: சவுதி அரேபியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 12% உயர்ந்துள்ளது.

சவுதி அரேபியாவின் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயலையும் குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதல்கள் (ட்ரோன்) நடத்தப்பட்டது,

இதையடுத்து எண்ணெய் சுத்திகரிப்பு கிடங்கில் பயங்கர தீப்பற்றி 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் நாசமானது. மேலும் நாளொன்றுக்கு 5.7 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு பீப்பாய் 60.15 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை 12% உயர்ந்து, 70.98 டாலராக உயர்ந்தது. வரும் நாட்களிலும் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.