தீக்குழியில் குழந்தையுடன் விழுந்தவருக்கு சிகிச்சை

சென்னை

சென்னை, செப்.16: சூளையில் அமைந்துள்ள பவானி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதில், அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 35) என்பவர், தனது சகோதரனின் பரணி என்ற 2 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு தீக்குழி இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாரதவிதமாக தவறி அந்த தீக்குழியிலேயே விழுந்துள்ளார். உடனடியாக, அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தை மற்றும் கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.