சென்னை, செப்.16: மயிலாப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மாத்தூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பவர், இரு லாரிகளின் ஆவணத்தை வைத்துவிட்டு ரூ. 10 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு, ஒரு மாத தவணையாக ரூ. 40,000 செலுத்தியுள்ளார். அதன்பிறகான தவணைகளை செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளார். இதனிடையே, மணிகண்டன் போலி ஆவணங்கள் தந்து கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், நிதி நிறுவன மேனேஜர் வெங்கட சுப்ரமணியம் அளித்த புகாரின்பேரில், மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்டன் (வயது 37) என்பரை கைது செய்தனர்.