ஜியாங்சூ, செப்.17: சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவின் ஜியாங்சூவில் உள்ள சாங்ஸ்ஹோவில் இன்று தொடங்குகிறது.

வரும் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில், இந்திய தரப்பில், சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பங்கேற்கிறார். அவர் இந்த தொடரில் 2016-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும் களமிறங்குகிறார். இதேபோல், இந்திய வீரர்களில் சாய் பிரனீத், காஷ்யப் ஆகியோர் பங்கேற்கின்றனர். காயம் காரணமாக ஸ்ரீகாந்த்தும், காய்ச்சல் காரணமாக பிரணாய்யும் விலகியுள்ளனர்.