டெல்லி, செப். 17: ஆ.ராசா, கனிமொழி தொடர்புடைய 2ஜி ஊழல் மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி சைனியிடம் இருந்து ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி குஹார் தலைமையிலான அமர்வுக்கு மாற்ற டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஐமு கூட்டணி ஆட்சியில் நடைபெறற் ரூ.1.76 லட்சம் 2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்து 2018-ம் ஆண்டில் தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிஐ சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி கடந்த ஜூலையில் சிபிஐ தரப்பில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி சைனி இம்மாத இறுதியில் ஓய்வு பெற இருப்பதை யொட்டி அவர் விசாரித்து வந்த 2ஜி ஊழல் வழக்கை அஜய்குமார் குஹார் அமர்வுக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர் ப.சிதம்பரம் சம்பந்தப்பட்ட ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கை விசாரித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.