சென்னை, செப்,17: போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக இரண்டே நாளில் 1.55 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் ஹெல்மெட் அணியாதது பற்றிய வழக்குகள் மட்டும் 1.18 லட்சம் ஆகும். தெற்கு மண்டல ஐஜி கே.பி. சண்முக ராஜேஸ்வரன், மத்திய மண்டல ஐஜி வி.வரதராஜு, மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் பதிவான 1,60,000 வழக்கு களில் ஹெல்மெட் அணியாதது தொடர் பானவை மட்டும் 1,18,018 ஆகும். சீட் பெல்ட் அணியாதது தொடர்பாக 36,835 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.