விழுப்புரம் செப் 17: இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு வருடந்தோறும் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, இவ்வருடம் மாவட்ட தோறும் அந்தந்த நிர்வாகிகளுக்கு வீரவணக்க நாள் செலுத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார், அதன்படி திண்டிவனத்தில் உள்ள பாமக வன்னியர் சங்க அலுவலகத்தில் தியாகி களுக்கு பாமக நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள், இதுபோல் விழுப் புரம் எல்லைக்கு உட்பட்ட கோலியனூரில் உள்ள பாமக நினைவுதூணக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தங்கஜோதி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாகிகளின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி விழுப்புரம் தொகுதி அமைப்பு செயலாளர் சிவக்குமார், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் அன்புமணி, ஹரிஹரன் முன்னாள் மாவட்ட செயலாளர் பழனிவேல் நிர்வாகிகள் புண்ணியகோடி தொகுதி செயலாளர் சீனிவாசன் சிவகுமார் மாநில செயற்குழு தலைவர் ராஜேந்திரன் வைத்திலிங்கம் நிர்வாகிகள் ஸ்டாலின் சந்தோஷ் சம்பத் எழிலரசன் மணிபாலன் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் காமராஜ் உள்பட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.