சென்னை,செப். 17: நியூசிலாந்து ஏவியேஷன் ஆட்டெரோவா லிமிடெட் ( என். இசட், எ,எ) நிறுவனத்துடன், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக வேல்ஸ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னைப் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் முன்னிலையில் நியூசிலாந்து ஏவியேஷன் ஆட்டெரோவா லிமிடெட் ( என். இசட், எ,எ) நிறுவனத்துடன், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கக் கூடிய ஏவியேஷன் தொடர்பான பலதரப்பட்ட பாடத்திட்டத்தினை உருவாக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் இந்தியா ஏவியேஷன் ஆட்டெரோவா லிமிடெட், நிறுவனத்தின் இயக்குனர்அகமது சுபையர், வேல்ஸ் பல்கலைக்கழகம், பதிவாளர் டாக்டர் வீரமணி,ஏவியேஷன் ஆட்டெரோவா லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி இராபர்ட் வில்லோபி, அனாடி டாங், மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் பன்னாட்டு உறவுகள் துறை இயக்குநர், இராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.