ஜம்மு, செப்.18: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து நடந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் அதிரடியாக முறியடித்து உள்ளது.

பிஓகே எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹாஜிபிர் பிரிவில் சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நாட்டின் அதிரடி எல்லை படையினர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த இந்திய பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது ராக்கெட் எறிகுண்டுகளை வீசி அந்த ஊடுருவல் முயற்சியை அதிரடியாக முறியடித்து உள்ளனர்.

இந்த ஊடுருவல் முயற்சியை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தான நிலையில், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை உள்ளே அனுப்ப பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. கடந்த ஆகஸ்டில் மட்டும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானின் 15 ஊடுருவல் முயற்சிகளை இந்திய ராணுவம் தடுத்து முறியடித்தது. குறிப்பிடத்தக்கது.