ஹனோய், செப்.18: வியட்நாமின் ஹோ சீ மின்ஹ நகரில் இருந்து தென் கொரியாவின் இச்சியான் என்ற பகுதிக்குக் தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்படத் தயாரானது.

160 பயணிகள் பாஸ்போர்ட், விசா சோதனைகள் முடித்து விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் விமானத்திற்குள் ஏறிக்கொண்டிருக்கும் போது தான் ஊழியர்கள் விமானியைத் தேடினர்.

அப்போது அவர் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு ஏர்போர்ட்டுக்குள் வர முடியாமல் தவித்தது தெரியவந்தது.அதனை தேடும் முயற்சியில் ஊழியர்களும் வெகு நேரமாக ஈடுபட்டனர்.

விமானத்திற்குள் ஏற்றப்பட்ட பயணிகளைக் கீழே இறக்கவும் முடியாத நிலையில் இரவு முழுவதும் தேடியும் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. அதால் இரவு முழுவதும் விமானத்திலேயே பயணிகள் காக்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

ஒரு வழியாக சுமார் 11 மணி நேர தாமத்திற்கு பின்பு விமானம் வியட்நாமில் இருந்து தென்கொரியாவை நோக்கிப் பறந்தது.