கொச்சி, செப்.18: இந்தியாவின் உள்நாட்டில் உருவாகும் முதல் போர் கப்பலின் கணினியில் மின்னணு பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

முதன்முறையாக உள்நாட்டில் உருவாகி வரும் போர் கப்பல் விக்ராந்த். கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படும் இந்த கப்பலை வருகிற 2021-ம் ஆண்டில் இந்திய கப்பற்படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கப்பலில் பெங்களூரு நகரை அடிப்படையாக கொண்ட பெல் நிறுவனம் அதிநவீன கணினிகளை நிறுவியுள்ளது.

நாட்டின் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உருவாகி வரும் கப்பலின் கணினியில் இருந்து மின்னணு பொருட்கள் திருடப்பட்டுள்ளன. ஹார்ட் டிஸ்க், ரேம் மற்றும் புராசஸர் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போய் உள்ளன. உயர் பாதுகாப்பு உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது