திருவள்ளூர், செப். 18: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பாக, தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, “போஷன் அபியான் – வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு’ விழிப்புணர்வு பேரணி மற்றும் உணவுத் திருவிழாவினை மாவட்ட கலெக்டர்மகேஷ்வரி ரவிக்குமார், கொடியசைத்து துவக்கி வைத்தார். “போஷன் அபியான் – வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு பேரணி மற்றும் உணவுத் திருவிழாவினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

குழந்தையின் முதல் 1000 நாட்களின் முக்கியத்துவம் உணர்த்துதல், ரத்தசோகை இல்லாமல் செய்தல், வயிற்றுப் போக்கு தடுத்தல் மற்றும் கட்டுப் படுத்துதல்போன்ற ஊட்டச்சத்துள்ள உணவு பற்றிய விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ரங்கோலி கோலங்கள் போடப்பட்டது. மேலும், பாரம்பரிய சத்தான உணவு வகைகள் கண் காட்சியில் வைக்கப் பட்டிருந்தது பேரணியில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்கும் வாக்கியங்களை கொண்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இப்பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, ஜெ.என். சாலை வழியாக சென்று, திருவள்ளுர் காமராஜர் சிலை அருகே நிறைவுற்றது. இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கலெக்டர் தலைமையில் ஊட்டச்சத்து உணவு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, மாவட்ட சமூக நல அலுவலர்ச.மீனா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.