செங்குன்றம், செப்.18: திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சீனியர், சூப்பர் சீனியர், பிரிவு சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டிக்கு மாவட்ட தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றிய முன்னாள் சேர்மன் பி.கார்மேகம், வீ.குமாரசாமி, டைகர் ஜாபர், கேப்டன் பிரதீப் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆர்.முருககனி வரவேற்றார்.

அதனை தொடர்ந்து அலேக்சாண்டர் எம்எல்ஏ பரிசு வழங்கி பேசியதாவது, சிலம்பம் என்பது தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாகும். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரிடம், அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கவேண்டும் என்று உடற்கல்வி நேரதை ஒதுக்கி தர வேண்டும் என்றும் வலியுறுத்துவேன் என்றார் இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர் மு.ராஜேந்திரன் ஐஏஎஸ், தமிழ்நாடு, பாண்டிசேரி, பார்கவுன்சில் சேர்மன், பி.எஸ்.அமல்ராஜ், மாவட்ட செயலாளர்கள் திருச்சி மதன்லால், சென்னை சீனிவாசன், செங்கல்பட்டு சென்ன கேசவலு, மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை நேதாஜி சிலம்பாட்ட கலைகூட செயலாளர் பசுபதி சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.