விழுப்புரம், செப்.18: விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- விழுப்புரம் பாகர்ஷா வீதியில் உள்ள கடைகளில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவற்றை விற்பனை செய்ததாக விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த அசாருதீன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.