தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், விஜய் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படத்தில், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. படத்தை எல்லோரும் காண ஆவலாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை தாம்பரத்தில் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.